இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் : கோவையில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கம்…!!

Author: Rajesh
29 March 2022, 1:32 pm

கோவை: மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் 30 சதவீதம் பேருந்துகள் இயங்கி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்றும் இன்றும் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதனால் வங்கி, போக்குவரத்து சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தடைபட்டுள்ளன. கோவையை பொறுத்தவரை வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 70 சதவீத அரசு பேருந்துகள் இயங்கவில்லை.30 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயங்க மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அந்தந்த டிப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் காலை நேரத்தில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும், பணிக்கு செல்லும் பொதுமக்களும் நேற்றும் இன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கோவையில் இருந்து கேரளாவுக்கும்,கேரளாவில் இருந்து கோவைக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!