ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!!

Author: Rajesh
19 March 2022, 9:38 am

கோவை: பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ரோஜா,மல்லி,தாமரை என 18 வகை மலர்களால் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் தலைவர் ராஜா வாத்தியார் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும்,கோவை வடவள்ளி,நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தொடர்ந்து 20 ஆம் ஆண்டாக புஷ்பாஞ்சலி நியூ தில்லை நகர் பகுதியில் ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம்,சுதர்சன மற்றும் நவக்ரஹ ஹோமங்களுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து மாலை ஆயக்குடி ஸ்ரீ குமார் பாகவதர் தலைமையில் அவரது குழுவினர் ஐயப்பன் பாடல்களை பஜனையுடன் பாடி அசத்தினர்.இதனை கூடியிருந்த பக்தர்கள் பரவசத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து ராஷ்டிரிய சனாதன சேவை சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் முன்னிலையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதில் பதினெட்டு படிகளும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தத்ரூபமாக வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு தாமரை,ரோஜா,மல்லி,சாமந்தி,என 18 வகை மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.இதில் பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!