மீண்டும் ஒரு சதுரங்க வேட்டை: புதையல் நகை என ஏமாற்றப்பட்ட வியாபாரி: பிரேக்கிங் நியூஸ் பார்த்தால் அதிர்ச்சி…….!!

Author: Sudha
12 August 2024, 4:17 pm

சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த ஒரு ஏமாற்று சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி, 59; மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 14ம் தேதி, அவரது கடைக்கு வந்த மர்ம நபர், சில பொருட்களை வாங்கியுள்ளார்.

அதற்கான பணம் தரும்போது, சில வெள்ளி நாணயங்களை கொடுத்துள்ளார்.அது குறித்து குமாரசாமி கேட்டபோது, தான் கூலி வேலை செய்வதாகவும், ஓரிடத்தில் பள்ளம் தோண்டும்போது வெள்ளி, தங்க நாணயங்கள், தங்கச்செயின் அடங்கிய புதையல் கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.தங்கம் வேண்டுமென்றால் அழைக்கும்படி, அவரது மொபைல் போன் எண்ணையும் கடைக்காரரிடம் தந்துள்ளார்.

அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, முதலில் இரு தங்கச்செயினை மர்ம நபர் தந்துள்ளார்.கடைக்காரர் குமாரசாமி, அந்த செயினை அடகு கடையில் சோதித்த போது, உண்மையான தங்கம் என தெரிந்தது.

மர்ம நபரிடம் நகைகள் நிறைய வாங்க வேண்டும் என்ற ஆசையில், 5 லட்சம் ரூபாயை, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே, கடந்த 24 ம் தேதி, குமாரசாமி தந்துள்ளார். பணத்தை பெற்ற மர்ம நபர், ஏராளமான நகைகளை கொடுத்து அனுப்பினார்.

இதற்கிடையே, இதுபோல் ஒரு சம்பவத்தில், போலி நகைகளை கொடுத்து, ஒருவரை ஏமாற்றியதாக, தாம்பரம் போலீசார் ஒரு பெண்ணை கைது செய்தனர்.இது குறித்த செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பானது.

இதையடுத்து, தான் ஏமாந்தது குறித்து, குரோம்பேட்டை காவல் நிலையத்தில், கடைக்காரர் குமாரசாமி கடந்த 28 ல் புகார் அளித்தார்.

இருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பையை வாங்கி சோதனை செய்த போது அதில் 3 போலி தங்க செயின்கள், 30,000 ரூபாய், ஒன்பது மொபைல் போன்கள் இருந்தன.தீர விசாரித்ததில், கர்நாடகாவைச் சேர்ந்த பாபுலால், மற்றும் ராகுல் என்பதும், மளிகை கடைக்காரர் குமாரசாமியிடம், போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியது இவர்கள் தான் என்பதும் உறுதியானது.

வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, அவர்களை சிறையில் அடைத்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!