நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் நேர்காணல்…

Author: kavin kumar
29 January 2022, 6:05 pm

கள்ளக்குறிச்சி : புதியதாக தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சி தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்து வந்த உளுந்தூர்பேட்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து வார்டுகள் வரையறை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு நடைபெறும் முதல் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெற்றவர்களிடம் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

இந்த நேர்காணலில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணிகணணன், ஒன்றிய பெரும்குழு தலைவர் ராஜவேலு, ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் நகர செயலாளர் டேனியல் ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் விருப்ப மனு அளித்த ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கலா நகர செயலாளர் டேனியல் ராஜ் உள்ளிட்ட விருப்பமனு அளித்த 200க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்தி வெற்றி வாய்ப்பு குறித்தும் அவர்களின் பின்னணி குறித்தும் விபரங்களை கேட்டறிந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!