பெரு நாட்டில் பள்ளத்தில் பாய்ந்த பயணிகள் பேருந்து: 20 பேர் பலி…33 பேர் படுகாயம்..!!

Author: Rajesh
11 February 2022, 8:27 am

லிமா: பெரு நாட்டில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டின் வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென சாலையில் இருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் பாய்ந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அந்த பகுதியில் வசிக்க கூடிய மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், 33 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

  • vignesh shivan and nayanthara team up with jani master create controversies போக்சோவில் கைதான நபருடன் பணியாற்றிய விக்னேஷ் சிவன்? நயன்தாராவை கட்டம் கட்டிய நெட்டிசன்கள்!