‘உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுவது நல்லது’: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை..!!

Author: Rajesh
11 February 2022, 9:44 am
us_president_joe_biden_updatenews360
Quick Share

வாஷிங்டன்: உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.

1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்து வருவதால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சமும், போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் 70 சதவீதத்தை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க மக்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்தி உள்ளார். “அமெரிக்கர்கள் இப்போதே வெளியேறுவது நல்லது” என்று பைடன் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையே எல்லை பதற்றம் நிலவி வரும் நிலையில் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 1201

0

0