9 வயதில் ஆடம்பர மாளிகை, தனி ஜெட் விமானம்…உலகின் இளம்வயது கோடீஸ்வரரான சிறுவன்: ஆச்சர்யமூட்டும் ஆடம்பர வாழ்க்கை…!!
Author: Rajesh31 January 2022, 3:20 pm
நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஆடம்பர மாளிகை, தனி ஜெட் விமானம் என கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வருவது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
முகமது அவல் முஸ்தபா எனும் அந்த சிறுவனுக்கு பல மாளிகைகள், தனி ஜெட் விமானம், விலை உயர்ந்த சொகுசு சூப்பர் கார்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இன்புளுயன்சர் என்று கூறப்படும் அவர் உலகின் ‘இளைய கோடீஸ்வரர்’ என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
வெறும் 9 பதிவுகளுடன் இன்ஸ்டாகிராமில் 25,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். நைஜீரியாவில் Mompha என்று பிரபலமாக அறியப்படும் இணைய பிரபலம் இஸ்மாலியா முஸ்தபாவின் மகன் தான் இந்த முகமது அவல் முஸ்தபா. 9 வயதாகும் அவர் சிறுவன் Mompha Junior என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு 6 வயதில் முதல் மாளிகை வழங்கப்பட்டது.
மொம்பா ஜூனியர் வழக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் காட்டுவார். முன்னதாக, அவர் தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் படத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அதில் அவர் , எந்தவொரு நைஜீரிய நபரையும் ஒருபோதும் குறைத்து பார்க்காதீர்கள், உண்மையான ஹஸ்ட்லர்கள் உடைந்து போக மாட்டார்கள், ஒருபோதும் உடைந்துவிடாதீர்கள்… ஹஸ்ட்லர்கள் சம்பிரதாயங்களிலிருந்து வேறுபட்டவர்கள்..கடவுள் ஆசீர்வதிப்பாராக என்று பதிவிட்டுள்ளார்.
0
0