ஆப்கனில் அதிர்ச்சி… அடுத்தடுத்து நிலநடுக்கம்… உருக்குலைந்து போன நகரங்கள் ; 4000க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!!

Author: Babu Lakshmanan
11 October 2023, 9:03 am
Quick Share

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 7ம் தேதி மட்டும் ஹெராத் மாகாணத்தில் 4 முறை நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் ஹெராத் பகுதியில் 20 கிராமங்கள் முழுமையாக நாசமாகின.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,10,000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (ANDMA)தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 20 கிராமங்களில் 1,980 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 610

0

0