விசாரணையில் சிக்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் : வீடு, அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனையில் ஷாக்.!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 11:15 am

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும். அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?