தைவானை சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சி ; எல்லையில் போர் பதற்றம்… விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 10:57 am

அமெரிக்க பிரதிநிதி வந்து சென்ற நிலையில், தைவானை சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பெரும் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றார். இந்நிலையில், தைவானை சுற்றி சீனா ராணுவப் பயிற்சியைத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தைவான் தீவைச் சுற்றியுள்ள ஆறு முக்கிய பகுதிகளை தேர்வு செய்து, அனைத்து கப்பல்களும் விமானங்களும் தொடர்புடைய கடல் பகுதிகள் மற்றும் வான்வெளிக்குள் நுழையக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தைவானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் இராணுவப் பயிற்சிகள் காரணமாக தைவான் விமானங்கள் செல்லும் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் சில விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தைவான் அரசு கூறுகையில், தங்கள் நாட்டின் தற்காப்பு திறன்களை வலுப்படுத்தி வருவதாகவும், அமெரிக்கா மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதாகவும் கூறியுள்ளது.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…