பிலிப்பைன்ஸ், மலேசியா நாடுகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : கட்டிடங்கள் குலுங்கியதால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 9:46 am

பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்க ஏற்பட்டதால் பீதியில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில்
லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.4ஆக பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது.

இந்த சக்தி வாயந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…