திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்புமணி ராமதாஸ் : குடும்பத்துடன் சாமி தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2022, 9:02 am
Tirupati Anbumani - Updatenews360
Quick Share

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு வந்தார்.

திருப்பதி ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்ட அவருக்கு, கோவில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்தப் பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோயில் வெளியே வந்த அவர் குடும்பத்தாருடன் கோயில் முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Views: - 617

0

0