என்னது ‘பீஸ்ட்’ படத்தை வெளியிடுவதற்கு தடையா?…கடும் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்: இதுதான் காரணம்..!!

Author: Aarthi Sivakumar
5 April 2022, 11:49 am
Quick Share

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ரிலீசுக்காக தளபதி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.

செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்திலிருந்து வெளியான போஸ்டர்ஸ், பாடல்கள் என அனைத்தும் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ட்ரைலர் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

என்னதான் சில எதிர்மறை விமர்சனங்கள் ட்ரைலருக்கு வந்தாலும் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களுக்கும் ட்ரைலர் பிடித்திருப்பதால் யூடியூபில் பல சாதனைகளை பீஸ்ட் ட்ரைலர் படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.

அந்த தகவல் என்னவென்றால் பீஸ்ட் திரைப்படம் குவைத் நாட்டில் தடைசெய்யப்பட்டிருப்பது தான். பீஸ்ட் திரைப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழில் வெளியான விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் மற்றும் மலையாளத்தில் வெளியான துல்கர்சல்மானின் குரூப் ஆகிய திரைப்படங்களுக்கு குவைத் அரசு தடைவிதித்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்திற்கும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 691

0

0