10 மாதம் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்குத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சென்றார் : இபிஎஸ் பரபர குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
5 April 2022, 12:37 pm
Quick Share

திருச்சி : கடந்த 10 மாதம் கொள்ளையடித்த பணத்தை துபாய்க்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடு செய்துள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சொத்து வரி உயர்வை எதிர்த்து திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தலைமை வகித்தனர்.

திருச்சியில் நடந்த போராட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- அதிமுக ஆட்சியில் வரியே உயர்த்தப்படவில்லை. மத்திய அரசு எவ்வளவு வரி உயர்த்தப்பட வேண்டும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மத்திய அரசு மீது பழியைப் போட்டு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

கடந்த 10 மாதங்களாக என்ன திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை திறந்து மட்டுமே வைத்து வருகிறார்கள். அதிமுக பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்து வருகின்றனர். 10 மாதத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்ன ?

முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் இன்ப சுற்றுலா சென்று வந்தார். திமுக கட்சி தொண்டர்கள் பணத்தில் ஏன் அரசு அதிகாரிகள் துபாய் செல்ல வேண்டும். பல மாதங்களாக துபாய் சர்வதேச கண்காட்சி நடந்து வந்த நிலையில், அந்தக் கண்காட்சி முடிய ஒரு வாரமே இருந்த போது, தமிழக அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து துபாயில் முதலீடு செய்யத்தான் ஸ்டாலின் சென்றார், என்று பகீரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Views: - 961

0

0