பெண்களை 10 வினாடிகளுக்கு குறைவாக தொட்டால் பாலியல் சீண்டல் கிடையாது … நீதிமன்றத்தின் விநோத தீர்ப்பு.. அதிர்ந்து போன மக்கள்!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 3:34 pm
Quick Share

பெண்களை 10 வினாடிகளுக்கு குறைவாக தொடுவது பாலியல் சீண்டல் கணக்கில் வராது என்று நீதிமன்றம் அளித்த விநோத தீர்ப்பு பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் படித்து வந்தார். கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற போது, தனது வகுப்பறைக்கு செல்வதற்காக மாடி படிக்கட்டில் ஏறிச் சென்றுள்ளார். அப்போது, தனது பின்பக்கமாக யாரோ தன்னை தொடுவது போன்றும், தனது கீழாடையை கழற்றுவது போலவும் அவர் உணர்ந்துள்ளார்.

உடனே திரும்பிப் பார்த்த போது, பள்ளியின் காவலாளி அச்செயலை செய்துள்ளார். அதோடு, விளையாட்டுக்காக இப்படி செய்ததாகவும் கூறி அசடி வழிந்துள்ளார்.

காவலாளியின் இந்த செயலால் கோபமான மாணவி, பள்ளி நிர்வாகியிடம் புகார் அளித்தார். மாணவியின் சம்மதம் இன்றி அவரை தான் சீண்டியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட காவலாளி, ஆனால் வேடிக்கைக்காகதான் அப்படி செய்தேன் என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய காவலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று இவ்வழக்கு விசாரணையின்போது மாணவி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், மாணவியை காவலாளி 10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் ரீதியாக சீண்டி உள்ளதால், அதனை குற்றமாக கருத முடியாது, எனக் கூறிஅந்த காவலாளியை விடுதலை செய்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இத்தாலி மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 311

0

0