நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Author: Babu Lakshmanan
1 ஜனவரி 2024, 5:18 மணி
Quick Share

நோபல் பரிசு பெற்ற வங்கதேசத்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த முகமது யூனிஸ் (83) என்பவர் பொருளாதார வல்லுநராவார். இவருக்கு வறுமை ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக கடந்த 2006ம் ஆண்டு நோபல் அமைதிப் பரிசு பெற்றார். கிராமீன் டெலிகாம் தலைவராக இருந்த போது, தொழிலாளர் நலநிதியை உருவாக்க தவறியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையின் முடிவில், முகமது யூனுஸ் மற்றும் 3 நிர்வாகிகளுக்கு தலா 6 மாத சிறைத்தண்டனையும், 25,000 டாகா (வங்காளதேச கரன்சி) அபராதமும் விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்ட உடனே 4 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி, ஒரு மாதம் ஜாமீன் வழங்கியது. தொழிலாளர் சட்டத்தின்படி, 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijay TVK ஆபாசமாக திட்டிய தவெக நிர்வாகி.. தீர்க்கவில்லையா மாநாட்டு பாக்கி? பரபரப்பு புகார்
  • Views: - 1044

    0

    0