விண்ணை முட்டும் விலை உயர்வு…வரலாறு காணாத நெருக்கடி: ஊரடங்கை மீறி வீதியில் இறங்கி போராடும் இலங்கை மக்கள்..!!

Author: Rajesh
3 April 2022, 9:17 am

கொழும்பு: இலங்கையில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை கண்டித்து ஊரடங்கை மீறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது இலங்கை. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர்.

இதனால், பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவானது அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.ஆனால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தடையை மீறி கொழும்புவில் மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இருட்டையும் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொது இடங்களில் கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!