டெஸ்லா மின்சார காரில் திடீர் தீ : புகையால் மூச்சுத்திணறிய நபர்.. உயிரை காப்பாற்ற சமயோஜிதமாக செயல்பட்ட ஓட்டுநர்! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 4:40 pm

கனடா : திடிரென தீப்பிடித்து எரிந்த மின்சார காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ஓட்டுநர் உயிர்தப்பினார்.

கனடா நாட்டில் ஜமீலு ஜூத்தா என்ற நபர் கடந் 8 மாதங்களுக்கு முன் டெஸ்டா நிறுவனத்தின் Y மாடல் மின்சார காரை வாங்கினார். இந்த நிலையில் காரை ஓட்டி சென்ற போது திடீரென WARNING SOUND வந்துள்ளது.

காரை ஓட்டிச் சென்ற ஜமீல் அதிர்ச்சியடைய, உடனே காரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கதவுகள் மூடிக்கொண்டது. பின் ஏசி துவாரங்கள் வழியாக புகை வர துவங்கியது.

இதனால் வேறு வழி தெரியாத அவர், உடனே ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தார். இந்த சம்பவத்தால் டெஸ்லா கார் வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

  • sachin's daughter went on a date with a Bollywood actor கில் உடன் மனக்கசப்பு… பாலிவுட் நடிகர் பக்கம் சாய்ந்த சச்சின் மகள்..!