உலகின் மிகப்பெரிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது… அதிர்ச்சியில் எலான் மஸ்க் ; வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 April 2023, 12:49 pm

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ‘சூப்பர் ஹெவி’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், நடுவானில் வெடித்து சிதறியது.

உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க். இவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் ‘சூப்பர் ஹெவி’ ராக்கெட்டை தயாரித்துள்ளது. மொத்தம் 394 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்டில் 33 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று திட்டமிட்டபடி விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸிற்கு சொந்தமான ஏவதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது, விண்ணில் சீறிபாய்ந்த சென்று கொண்டிருந்த சூப்பர் ஹெவி ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ராக்கெட் ஏவியது தோல்வியில் முடிந்தது குறித்து எலான் மஸ்க் கூறியது, “இன்னும் ஓரிரு மாதங்களில் மீண்டும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும்,” என்றார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?