வேலைக்கு போக சொல்லி வற்புறுத்திய மனைவி: கொடூரமாக குத்திக்கொன்ற கணவன்…கோவையில் பகீர்..!!!

Author: Rajesh
21 January 2022, 2:41 pm

கோவை செல்வபுரம் பிரியா நகர் பகுதியை சேர்ந்த இராமநாதன். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அடிக்கடி கனவன் மனைவிக்குள் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த இராமநாதனுடன் இதுகுறித்து கேள்வி எழுப்பி மனைவி அனுராதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இராமநாதன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி அனுராதாவை வயிறு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார்.

வலிதாங்க முடியாமல் துடித்த அனுராதா சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலிசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கனவன் இராமநாதனை கைது செய்த போலிசார் நீதிமற்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேலைக்கு போகச்சொன்ன மனைவியை குத்திக்கொன்ற கனவனின் வெறிச்செலலால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…