வரலாற்றை பறைசாற்றிய தமிழக அலங்கார ஊர்திகள்… அணிவகுப்பில் வேலுநாச்சியர் முதல் பெரியார் வரை..!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 11:13 am

சென்னை : 73வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் நிராகரிக்கப்பட்ட ஊர்திகள் சென்னையில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்டன.

மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்என் ரவி தேசியக் கொடியை ஏற்றினார். இதை தொடர்ந்து, டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகள் சென்னையில் அணிவகுத்து சென்றன.

இதில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், குயிலி ஆகியோர் சிலைகளுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது.

இதேபோல், விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி, பாரதியார், சுப்பிரமணிய சிவா, ராகவாச்சாரி அவருடன் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களை காட்சிபடுத்தும் தத்ரூப சிலைகளுடன் சுதேசி கப்பலும் அலங்கார ஊர்தியில் இடம்பெற்றது. தந்தை பெரியார், ராஜாஜி, காமராஜர், தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் தத்ரூப உருவங்கள் அடங்கிய தத்ரூப சிலைகள் கொண்ட ஊர்தியும் இடம்பெற்றது.

  • siddharth 3bhk movie twitter review வீட்டை நல்லாதான் கட்டிருக்காங்க, ஆனால்? 3BHK படத்தை பார்த்து எகிறும் ரசிகர்கள்!