கடும் குளிரிலும் தேசியக் கொடியேற்றி குடியரசு தினக் கொண்டாட்டம் : மெய்சிலிர்க்க வைத்த இந்திய வீரர்களின் செயல்..!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 10:42 am
Quick Share

நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, லடாக் எல்லையில் கடும் குளிருக்கு மத்தியிலும் தேசியக் கொடியேற்றி இந்திய வீரர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் 73வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் 73வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார். அதே போல, பிற மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர்.

குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட தினங்களின் போது எல்லையில் பாதுகாப்பு படையினராலும் குடியரசு தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், லடாக் எல்லையில் 15 ஆயிரம் அடி உயரத்தில், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையினர் மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் தேசியக்கொடியை ஏற்றி குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.

அதேபோல, உத்தரகாண்ட் மாநில குமாண் பகுதியில் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடியுடன் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இமாசலபிரதேசத்தில் 16 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடியுடன் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Views: - 2525

0

0