கோவை தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு…

Author: kavin kumar
3 February 2022, 8:16 pm

கோவை : கோவையில் அதிமுக சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 65 வது வார்டு வேட்பாளராக சங்கீதா கார்த்திக் கண்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது. கோவை மாநகராட்சியில் சிங்காநல்லூர் 65வது வார்டில் இக்கட்சி போட்டியிடுகிறது. வார்டு வேட்பாளராக சங்கீதா கார்த்திக் கண்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியானது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வேட்பாளரை கோவை மாவட்ட தலைவர் வி.வி. வாசன் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து பேசிய அவர், அதிமுக கூட்டணியில் 11 வார்டு கேட்ட நிலையில், 1 வார்டு மட்டும் ஒதுக்கப்பட்டதாகவும், அதனை ஏற்று கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் சிறப்பாக பணியாற்றி வேட்பாளரை வெற்றி பெற செய்வோம் என கூறிய அவர், அதிமுக வெற்றி பெறவும் பணிகள் மேற்கொள்வோம் என தெரிவித்தார். மேலும் அதிமுக வின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

  • director pandiraj said that he afraid of soori film director become his competition இவன் நமக்கு போட்டியா வந்துடுவானோ?- சூரி படத்தை பார்த்து பயந்து போயிருக்கும் பிரபலம்!