புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுத்த வழக்கு : 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 6:07 pm

புதுச்சேரி : முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து புதுச்சேரி தலைமை நீதிமன்ற சிறப்பு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் வீடு, எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது. இவரது வீட்டின் முன்பு கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தியதில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த் திருசெல்வம், தமிழரசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வழக்கு , புதுச்சேரி நீதிமன்றத்தில் (தலைமை நீதிமன்றம்) நடந்து வந்தது, வழக்கில் 80க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் . இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை தொடர்ந்து இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருசெல்வம், தமிழசன், தங்கராசு, காளிலிங்கம், ஜான்மார்ட்டின், கார்த்திக் ஆகிய ஆறு பேரும் குற்றவாளிகள் என புதுச்சேரி நீதிமன்ற சிறப்பு நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் இதில் ஐந்து பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிபதி செல்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் 5 குற்றவாளிக்கு ரூ.3,500 அபராதமும், 1 குற்றவாளிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2014 ஆம் ஆண்டு முதல் வழக்கு நடைபெற்று வருவதால், நீதிபதி அறிவித்த தண்டனை ஏழு ஆண்டுகள் ஏககாலத்தில் அனுபவித்து உள்ளார்கள், எனவே இவர்கள் ஆறு பேரும் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?