சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்: கோவையில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுக வேட்பாளர்கள்..!!

Author: Rajesh
8 February 2022, 11:05 am

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தனித்து போட்டியிட்டு தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சி 31 வது வார்டு பகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் கணேஷ்குமார் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து வரும் கணேஷ் குமார் கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வருவதாகவும்,குறிப்பாக கோவையில் முன்னால் அமைச்சர் வேலுமணி செய்த வளர்ச்சி பணிகள் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் என உறுதி பட கூறினார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டில் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து கவுன்சிலராக பணியாற்றியவர் பிரபாகரன். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர்,தற்போது நான்காவது முறையாக அதே வார்டில் களமிறங்கி உள்ளார்.

அந்தபகுதி மக்களிடையே நன்மதிப்பை பெற்ற பிரபாகரன் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் 47 வது வார்டை பொறுத்தவரை கடந்த பத்து வருடங்களில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உள்ளதாக கூறிய அவர், கோவை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரி வார்டாக எனது வார்டை மாற்றுவேன் என உறுதி அளித்தார்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…