காதல் திருமணம் செய்த ஜோடி…பிரித்து வைத்த பெற்றோர்: விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

Author: Rajesh
8 February 2022, 5:19 pm

கோவை: கோவை அருகே தன்னுடன் வீட்டை விட்டு ஓடி வந்த காதலியை பிரித்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார்(26). பால் வியாபாரி. இவர் அதேபகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த சில மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த அவர்கள் சமீபத்தில் கொடைக்கானல் சென்றனர்.
இதற்கிடையே தனது மகளை காணாது அதிர்ச்சியடைந்த பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், காதல் ஜோடி கொடைக்கானலில் தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டு கோவை அழைத்து வந்தனர். காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

அப்போது அந்த இளம்பெண் தன்னுடைய பெற்றோருடன் செல்வதாக விருப்பம் தெரிவித்தார். இதனால் போலீசார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக சரவணக்குமார் மிகுந்த மன உளைசலுக்கு ஆளாகினார்.

காதலியை மறக்க முடியாமல் தவித்த அவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…