பேருந்தில் பீர் குடித்தபடி பயணித்த மாணவிகள் : விசாரணையை முடுக்கிய காவல்துறை… கடும் நடவடிக்கை – DEO உறுதி..!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 3:52 pm

பள்ளி மாணவிகள் பேருந்தில் பீர் குடித்தபடி பயணிக்கும் அதிர்ச்சி வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அரசுப் பேருந்துகளில் பயணித்தே, பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பேருந்தில் பீர் குடித்தபடி பயணிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பேருந்தில் கத்தி, கூச்சலிட்டு சக பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அவர் ஆட்டம், பாட்டம் போட்டுள்ளனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலகர் ரோஸ் நிர்மலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, இந்த சம்பவம் பள்ளிக்கு வெளியே நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு திருவள்ளூரில் ரயிலில் மாணவி ஒருவர், நடைமேடையில் காலை உரசியடி சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியளித்தது. இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவியை பெற்றோருடன் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தது நினைவிருக்கலாம்.

  • ss rajamouli shared about sharing unverified war photos and videos பாகிஸ்தானுக்கு உதவாதீங்க; கம்முனு இருங்க- நெட்டிசன்களை பார்த்து எச்சரிக்கும் ராஜமௌலி