மனநலம் பாதித்தவர் எனக் கூறியதால் ஆத்திரம்… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்..!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 9:22 am

புதுச்சேரியில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக செல்போன் டவர் மீது ஏரி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது

புதுச்சேரி ஏம்பளம் பகுதியை சேர்ந்தவர் தேவா (26). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. செல்போன் டவர் மெக்கானிகான இவரது வீட்டில் கடந்த ஒரு மாதகாலமாக குடும்ப சொத்துக்களை பிரிப்பது சம்பந்தமான பிரச்சினை நடைபெற்று வருவதாகவும், இதற்கான சட்ட பணிகளை பெண் வழக்கறிஞர் ஒருவர் செய்து வருவதும், அவர் தேவாவை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த தேவா நேற்று நள்ளிரவு தனது வீட்டின் அருகே இருந்த செல்போன் டவர் மீது ஏறி கொண்டு, தன்னை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய பெண் வழக்கறிஞர் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் தாம் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார்.

இதனால் அங்கு ஒன்று கூடிய ஊர் மக்கள், தேவாவை டவரில் இருந்து கீழே இறங்க சொல்லியும் அவர் இறங்கவில்லை. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் இது குறித்து மங்களம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தேவாவிடம் கீழே வந்தால் தனது கோரிக்கை நிறைவேற்றப்படும் என லாவகமாக பேசி, அவரை செல்போன் டவரில் இருந்து கீழே வரவழைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

நள்ளிரவில் குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…