திமுகவின் ஓராண்டு ஆட்சியில் சாதனை எல்லாம் கிடையாது… மக்களுக்கு வேதனையோ வேதனை… இபிஎஸ் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
7 May 2022, 4:34 pm

திமுக அரசின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு வேதனையான காலம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும் சட்டப்பேரவையில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதனிடையே, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதை தடுக்க, மத்திய அரசின் ஒப்புதலுடன் நடந்தாய் வாழி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, குடிமராமத்து, விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

அதிமுக ஆட்சியில் 6 மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம், அதிலும் விவாசயிகளுக்கு மும்மனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு மகத்தான திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு தற்போழ ரத்து செய்துவிட்டது.

நீட் கொண்டு வந்ததும் திமுகதான். இப்போது, நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி நாடகமாடி விட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் மினி கிளினிக் கொண்டு வந்தது அதிமுக அரசு. சென்னை மாநகரில் குற்றங்களை தடுக்க சிசிடிவி பொறுத்தி உள்ளோம்.

அதிக அளவிலான சாலைகளை விரிவாக்கம் செய்து, தரமான சாலைகளை அமைத்து கொடுத்தோம். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களின் மருத்துவ கனவை 7.5% இட ஒதுக்கீடு மூலம் நிறைவேற்றியது அதிமுக அரசு. இப்படி பல்வேறு பெரிய்திட்டங்களை நிறைவேற்றி சாதனை மேல் சாதனை படைத்துள்ளோம். முதலமைச்சர் ஸ்டாலின் ஓராண்டு சாதனையை வெளியிட்டுள்ளார். மக்கள் வேதனை மேல் வேதனை படுகின்றனர். அவர்கள் செய்தது சாதனை அல்ல வேதனை. நாட்டிலேயே எங்கும் தயாரிக்க முடியாத வகையில் ஒழுகும் வெல்லத்தை மக்களுக்கு பொங்கல் தொகுப்பில் கொடுத்தனர், எனக் கூறினார்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…