விருதுநகர் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 10:39 am

விருதுநகர் : தேங்காய் எண்ணெய் மில்லில் பயங்கர தீ விபத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.3 மணி நேரத்திற்கு மேலாக 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க போராடினர்.

விருதுநகர் மல்லாங்கிணறு சாலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். நகரில் முத்துராமன் பட்டியை சேர்ந்த அப்பணசாமி என்பவருக்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் ஆயில் மில் உள்ளது.

இந்த மில்லில் தேங்காயிலிருந்து ஆயில் பிரித்து எடுக்கும் வேலை நடைபெறுகிறது. வழக்கம் போல் வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இரவு நேரம் என்பதால் வேலையாட்கள் அனைவரும் இரவு உணவுவிற்காக சென்ற நிலையில் திடீரென இந்த ஆயில் மில்லில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த மில்லில் தேங்காய் எண்ணெயை சேமித்து வைக்கும் சுமார் 10 லட்சம் லிட்டர் மதிப்பிலான 3 டேங்க் உள்ளது.

இது போக எண்ணெய் தயாரிக்கும் மூன்று இயந்திரங்கள் உள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை

மேலும் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் ஊரகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • sara arjun as heroine 40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!