கோவை அரசுக் கலைக் கல்லூரியில் முறைகேடு? 6 மாதமாக பாடம் நடத்தாத பேராசிரியர் : ஆட்சியரிடம் முறையிட்ட மாணவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 May 2022, 4:11 pm
Cbe Govt Arts Issue - Updatenews360
Quick Share

கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடன் மனு அளிக்க வந்தனர்.

மனு அளிக்க கல்லூரியிலிருந்து திரளாக வந்த மாணவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களின் நலன் மற்றும் கல்லூரி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் யுஜிசி போன்ற பலவற்றில் முறைகேடு நடந்து வருவதாகவும் முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது விசாரணை நடத்துவதற்கு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியர் பாத்திமா கடந்த ஆறு மாதங்களாக பாடங்கள் எதுவும் எடுக்காமல் இருந்து வரும் நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Views: - 536

0

0