எலும்பு தேய்மானத்தை தடுக்கும் சுவையான ராகி இட்லி!!!

Author: Hemalatha Ramkumar
8 July 2022, 7:23 pm

இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் அந்த காலத்து பாரம்பரிய உணவுகள் போல சத்துக்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக வயதான காலத்தில் ஏற்படும் நோய்களும், குறைபாடுகளும் இளம் வயதிலேயே ஏற்படுகிறது. இதனை தடுக்க சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். அந்த வகையில் எலும்பு தேய்மானத்தை தடுக்க உதவும் கேழ்வரகு கொண்டு மெது மெது இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

கேழ்வரகு இட்லி செய்ய தேவையான பொருட்கள்: கேழ்வரகு – 1 கப்
இட்லி அரிசி – 1/2 கப் உளுந்து – 1/2 கப் வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய அளவுகளில் கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.

*அனைத்து பொருட்களையும் ஒரே கப்பில் தான் அளக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.

*ஆறு மணி நேரம் ஊறியதும் இதனை கிரைண்டர் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

*அதிகமாக தண்ணீர் சேர்த்து விடாமல் இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

*பின்னர் மாவை ஆறு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

*மாவு நுரைத்து புளித்த பின்னர் இட்லி தட்டில் ஊற்றி அவித்து கொள்ளலாம்.

*பொதுவாக இட்லி வேக ஏழு நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் இது ராகி இட்லி என்பதால் பதினைந்து நிமிடங்கள் அவிய வையுங்கள்.

*அவ்வளவு தான், சுவையான ராகி இட்லி தயார்.

*இதனை காரசாரமான சட்னி நன்றாக இருக்கும்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…