தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது… கருப்பு பேட்ச் அணிந்து ஆட்சியரிடம் முறையிட ஆசிரியர்கள் முடிவு

Author: Babu Lakshmanan
17 July 2022, 7:14 pm

கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாணவியின் உறவினர்கள் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டினர். இந்த நிலையில், மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளிக்கு எதிராக மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரை தாக்கி பள்ளிக்குள் நுழைந்து, பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டடத்தை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன், சிபிஎஸ் இ நர்சரி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். மேலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து முறையிட இருப்பதாகவும் கள்ளக்குறிச்சி பள்ளி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  • I will campaign for Vijay… Famous actress makes a bold announcement! விஜய்க்காக நான் பிரச்சாரம் செய்வேன்… பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!