கோவை ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் தற்கொலை : யோகா பயிற்சியில் ஈடுபட்ட நபர் விபரீத முடிவு.. போலீசார் விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 2:06 pm

கோவை : ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்த ஆந்திர மாநில இளைஞர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் கொள்ளு ரமணா (வயது 32). இவர் மன அழுத்தம் காரணமாக கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு ஈசாவிலுள்ள அவரது அறையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் ரமணாவின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஈஷா யோக மைத்தில் டி.எஸ்.பி திருமாள் தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்று வந்த நபர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!