நீங்க தினமும் வெந்தய சாப்பிடுபவராக இருந்தால் கவனமா இருங்க!!!

Author: Hemalatha Ramkumar
3 October 2022, 3:49 pm
Quick Share

வெந்தயம் ஒரு சக்தி மிகுந்த விதையாகும். இருப்பினும் எந்த ஒரு பொருளையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்த வகையில் வெந்தயத்தின் பல்வேறு பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

வெந்தய விதைகளின் பக்கவிளைவுகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:

வயிறுப்போக்கு:
வெந்தய விதைகளை அதிகமாக உட்கொள்வதால் வயிற்று போக்கு ஏற்படலாம். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வெந்தயம் சாப்பிடுவதால் வயிற்றுபோக்கை அனுபவித்தால் உடனடியாக அதன் நுகர்வை நிறுத்த வேண்டும். ஏனெனில் தாய் பாதிக்கப்படும் எந்தவொரு பக்க விளைவுகளாலும் குழந்தைகளும் எளிதில் பாதிக்கப்படுவார்கள்.

ஒவ்வாமை பிரச்சினைகள்:
வெந்தயத்தின் மற்றொரு சாத்தியமான பக்க விளைவு என்னவென்றால், இது தோல் எரிச்சல் மற்றும் சிவப்பை ஏற்படுத்தும் ஒவ்வாமை பிரச்சினைகளை தூண்டும்.

குழந்தைகளில் வயிற்றுப்போக்கு:
வெந்தயத்தை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எனவே வெந்தய விதைகளை அவர்களுக்கு வழங்குவது நல்லதல்ல.

மற்ற சப்ளிமெண்ட்ஸுடன் எடுத்துக் கொள்ளும்போது பக்க விளைவுகள்:
நம்மில் பலர் பல்வேறு காரணங்களுக்காக சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொண்டிருக்கலாம். மேலும் நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், வெந்தயத்தை சப்ளிமெண்ட்ஸுடன் சேர்த்து உட்கொள்வது உடலில் சர்க்கரையின் அளவைக் கடுமையாகக் குறைக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லதல்ல:
வெந்தயத்தை எப்போதாவது ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது நல்லது. ஆனால் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடுவதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு அஜீரணம், குமட்டல் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.

Views: - 654

0

0