ஸ்ட்ரா பயன்படுத்தி குடிப்பதால் ஏற்படும் எதிர்ப்பாராத பிரச்சினைகள்!!!

Author: Hemalatha Ramkumar
8 November 2022, 7:03 pm
Quick Share

பல ஆண்டுகளாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கின் தரம் பற்றி நாம் பேசினாலும் கூட, பிளாஸ்டிக் எந்த வடிவத்திலும் இருப்பினும் அது சிதைவதற்கு பல தசாப்தங்கள், ஒருவேளை நூற்றாண்டுகள் வரைக்கூட எடுக்கும் என்ற உண்மையை மறுக்க முடியாது. இதனால் மண், நீர், காற்று மற்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்கள் கூட மாசுபடுகிறது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, உயிரினங்களின் நுரையீரலில் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. முன்னதாக, விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் மனிதர்களின் மலம் மற்றும் இரத்தத்தில் பிளாஸ்டிக் தடயங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது கடல்களின் ஆழத்திலும், நீர்வாழ் உயிரினங்களின் உடல்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் உலகை எவ்வாறு சேதப்படுத்துகின்றன?
அனைத்து கடல் ஆமைகள் மற்றும் கடல் பறவைகளில் குறைந்தது 90% பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது. பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் சிறு சிறு பிளாஸ்டிக் துண்டுகளை உணவென தவறாகப் புரிந்துகொண்டு உண்கின்றன. அதைத் தங்கள் உடலில் இருந்து வெளியேற்ற முடியாவிட்டால் இறுதிவரை அவை அதனோடு அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் மனிதர்களுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும்?
பல் சிதைவு மற்றும் பல் சொத்தை ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்:
பல் சொத்தையானது பல வாய்வழி சுகாதார பிரச்சினைகள் பெரும்பாலும் நொறுக்கு தீனிகளைச் சாப்பிடுவது மற்றும் காற்றடைக்கப்பட்ட பானங்கள் குடிப்பதால் ஏற்படுகிறது. ஸ்ட்ரா மூலம் குடிப்பது உதவக்கூடும் என்று நீங்கள் நினைத்தாலும், அது உண்மையல்ல. பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தி நீங்கள் எதையும் குடிக்கும்போது, ​​​​ஸ்ட்ராவானது உங்கள் பற்கள் மற்றும் பற்சிப்பியைத் தொடும். இது உங்கள் கடைவாய்ப்பல்களுக்கு பிரச்சனைகளுக்கான அதிக ஆபத்தை உருவாக்கலாம்.

எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது:
வண்ணமயமான பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் வைத்து குடிக்கும்போது நீங்கள் எப்போதும் குடிப்பதை விட அதிகமாக குடிக்க வைக்கும். காற்றடைக்கப்பட்ட மற்றும் அதிக கலோரி கொண்ட குளிர்பானங்களை சிறிதளவு பருகுவது உங்கள் எடையை அதிகரிக்கச் செய்யும்.

முன்கூட்டிய வயதான அறிகுறிகள்:
நீங்கள் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தி குடிக்கும் போது, ​​பானத்தை உங்கள் வாயில் உறிஞ்சுவதற்கு உங்கள் உதடுகளைக் கொண்டு உறிஞ்சுகிறீர்கள். இந்தச் செயலை மீண்டும் மீண்டும் செய்வதால், உங்கள் உதடுகளைச் சுற்றி மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகலாம்.

உங்கள் பற்களை கறைபடுத்தலாம்:
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை உங்கள் வாயின் பின்புறத்தில் வைத்திருந்தால், உங்கள் பற்களால் பானத்துடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கலாம். இருப்பினும், பற்களுக்கு இடையில் வைத்து மெல்லும் பழக்கம் இருந்தால், அது பற்களில் கறை படிவதற்கு வழிவகுக்கும்.

Views: - 292

0

0