அரசு பேருந்தை வழிமறித்து நடுரோட்டில் ஓட்டுநரின் சட்டையை கிழித்து கட்டிப்புரண்டு சண்டை : ஆபாசமாக பேசி அத்துமீறிய போதை ஆசாமி..!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 10:51 am

நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இருந்த ஆசாமி வழிமறித்து ஓட்டுநரை ஆபாசமாக பேசி ஓட்டுநருடன் கட்டி புராண்டு சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் இருந்து தினமும் இரண்டு மணி அளவில் சக்கையநாயக்கனூர், அழகம்பட்டி, மேட்டூர் அம்பாத்துரை சின்னாளப்பட்டி வழியாக திண்டுக்கலை நோக்கி அரசு நகரப் பேருந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் இன்று அரசு நகர பேருந்தை ஆரோக்கியதாஸ் என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார். நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி வரும் வலையில் அழகம்பட்டி சக்கையநாயக்கனூர் இடையே சாலையில் வந்த பொழுது மது போதையில் இருந்த ஒரு இளைஞர் அரசு நகரப் பேருந்து வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் பேசி நிறுத்தியுள்ளார்.

ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் கேட்டபோது ஓட்டுநரையும் தரை குறைவாகவும் ஆபாசமாகவும் பேசி உள்ளார். பேருந்தை நிறுத்திய ஓட்டுனரிடம் பேருந்துக்குள் ஏறி சண்டை போடத் துவங்கியதால் பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் உட்பட அனைவரும் அதர்ச்சியுற்றனர்.

அதேபோல் பேருந்தில் இருந்து கீழே இறங்கி சாலையில் ஓட்டுனரும் மது போதை இளைஞரும் சண்டையிட்டு உருண்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்தும் பாதிப்படைந்தது.

அதேபோல் பொதுமக்கள் கேள்வி கேட்ட பொழுது அவர்களையும் போதை ஆசாமி ஆபாசமாக பேசி உள்ளார். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து எங்கும் செல்ல முடியாமல் அதே இடத்தில் நின்றது.

மேலும் ஓட்டுநரின் சட்டையை போதை ஆசாமி கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் போதை ஆசாமி மீது அமையநாயக்கனூர் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?