துபாயில் இருந்து விரக்தியுடன் திரும்பிய ஓட்டுநர்… மனைவி வேலைக்கு போன பிறகு எடுத்த விபரீத முடிவு ; அநியாயமாக பறிபோன 3 உயிர்கள்!!

Author: Babu Lakshmanan
9 December 2022, 8:59 am

திருச்சியில் ஓட்டுநர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவனைக் காவல் கொண்டையம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). இவர் துபாயில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 4 மாதம் முன்பு துபாயிலிருந்து திரும்பினார். இவரது மனைவி கருமண்டம் பகுதியில் உள்ள கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை வேலைக்கு சென்ற இவர் மாலை 7.30 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு சாத்தியிருந்ததால் தட்டினார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கார்த்திகேயன், அவரது தாய் வசந்தா மற்றும் அவரது மகன் சாமிநாதன் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…