சுற்றுலா இடங்களுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை : கொடைக்கானல் வனத்துறை போட்ட அதிரடி ஆர்டர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2022, 12:41 pm

கொடைக்கானலில் மாண்டஸ் புயல் எதிரொலி சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மான்டஸ் புயல் எதிரொலியாக சூறைக்காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது . இந்த தொடர் மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக நகர் பகுதி நெடுஞ்சாலைத்துறை பகுதி வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது ராட்சத மரங்கள் முறிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது.

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

தொடர் மழை காரணமாக இன்று இந்த சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும், புயல் மழை குறைந்த உடன் இந்த சுற்றுலா இடங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நகர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் தற்காலிகமாக படகு சவாரி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது .

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?