காலை உணவிற்கு ஏற்ற அட்டகாசமான கோதுமை பேன்கேக்! 

Author: Hemalatha Ramkumar
6 March 2023, 4:21 pm
Quick Share

காலை உணவிற்கு நீங்கள் இட்லி தோசைக்கு பதில் வேறு ஏதேனும் புதிதாக முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் கண்டிப்பாக இந்த கோதுமை பேன்கேக்கை முயற்ச்சி செய்து பாருங்கள். இதற்கு ரெடி மேட் மிக்ஸ் கூட கடைகளில் கிடைக்கின்றன. இதன் செய்முறை குறித்து விளக்கமாகப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப் 

சர்க்கரை – 2 தேக்கரண்டி 

பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி 

பேக்கிங் சோடா – 1/4 தேக்கரண்டி 

உப்பு – 1/4 தேக்கரண்டி 

மோர் – 1 கப் 

முட்டை – 1

உருகிய வெண்ணெய் – 2 டீஸ்பூன் 

செய்முறை:

  • ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
  • மற்றொரு கிண்ணத்தில், மோர், முட்டை மற்றும் உருகிய வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து விஸ்க் கொண்டு கலக்கவும்.
  • பின்னர் அந்தக் கலவையை முன்பு வைத்திருந்தவற்றுடன் சேர்த்து மறுபடியும் கலக்கவும். 
  • இரண்டையும் சேர்த்து ஓரளவுக்கு கலக்க வேண்டும். கட்டிகள் இல்லாதவாறு மிக அதிகமாக கலக்கக் கூடாது. ஒரு சில கட்டிகள் இருந்தால் தான் சாஃப்ட் ஆக உப்பி இருக்கும். இல்லையென்றால் மிகவும் கடினமாக இருக்கும். 
  • அடுப்பில் தோசைக் கல் வைத்து கல் சூடான உடன் நீங்கள் கலக்கி வைத்துள்ள மாவைக் கொண்டு சிறிய கேக் போல ஊற்றி வேக வைக்கவும்.  
  • பபிள்ஸ் வரத் தொடங்கியதும் அதனை திருப்பிப் போட்டு வேக விடுங்கள். 
  • பொன்னிறமாக ஆனவுடன் அதனை எடுத்து அதன் மேல் தேன் ஊற்றி சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். காலை உணவிற்கு ஏற்றது. இதனை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆகவும் கொடுக்கலாம். 

குறிப்பு: உங்களுக்கு பால் சார்ந்த பொருட்கள் பிடிக்காது என்றால் வெண்ணைக்கு பதில் நீங்கள் தேங்காய் எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.   

Views: - 444

0

0