அடேங்கப்பா…அன்றாடம் பயன்படுத்தும் தக்காளியில் இத்தனை மருத்துவ குணங்களா…???

Author: Hemalatha Ramkumar
21 March 2023, 2:19 pm

பெரும்பாலான இந்திய சமையல்களில் தக்காளி இல்லாமல் இருக்காது. தக்காளி எந்த ஒரு உணவிற்கும் ஒரு சிறந்த கூடுதலாக அமைகிறது. உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட தக்காளி வகைகள் வளர்க்கப்படுகின்றன என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அவை சுவையாக இருப்பதோடு, ஊட்டச்சத்துக்களால் நிரம்பியதாகவும் இருக்கிறது. தக்காளியில் 95% தண்ணீராக இருப்பதால் இடுப்புப் பகுதிக்கும் சிறந்தவை.

தக்காளியின் சில ஆரோக்கிய நன்மைகள் குறித்த இப்போது பார்க்கலாம். தக்காளியில் வைட்டமின்கள் சி, கே1, பி9 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. அதாவது அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான எலும்புகளை மேம்படுத்தவும் மற்றும் ஆரோக்கியமான திசுக்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் சிறந்தவை. ஃபோலேட்டின் ஆதாரமாக இருப்பதால் தக்காளி குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க தக்காளி உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக தக்காளி ஒரு நபரின் நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும்.
தக்காளிகளில் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் உள்ளிட்ட உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் உள்ளன. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • dhanush starring kuberaa movie twitter review Second Half நல்லாதான் இருக்கு;; ஆனா First Half ? – குபேரா படம் பத்தி என்ன பேசிக்கிறாங்க?