கட்சியில் இருந்து விலகிய பிறகும் அந்த வார்த்தையை சொல்லி திட்டுறாங்க : பாஜக தலைவர் மீது முன்னாள் மகளிரணி நிர்வாகி பரபரப்பு புகார்..!!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 8:12 pm

கட்சிக்குள் இருக்கும் போது அந்த வார்த்தையை சொன்னதாகவும், கட்சியை விட்டு விலகிய பின்னரும் அதே வார்த்தையை கூறி பெண்களை இழிவுபடுத்துவதாக கரூர் மாவட்ட பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அளவில் பாஜக என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கின்ற பேச்சு, நடிகையும், பாஜக நிர்வாகியுமான காய்த்ரி ரகுராம் கட்சியை விட்டு விலகியதிலிருந்தே நீடித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலத்தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தே தொடர்கின்றது.

இந்நிலையில், கே.டி.ராகவன் சர்ச்சை, நடிகை காய்த்ரி ரகுராம் ஆகியோரை தொடர்ந்து கரூர் மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் விவி.செந்தில்நாதன், பெண்களை மதிப்பதில்லை என்றும், பெண்களை தவறாக விமர்சனம் செய்வதோடு, அவர்களுக்கு குழந்தை இல்லை என்றால் அவர்களுக்கு மலடி என்கின்ற பட்டமும், தொடர்ந்து அது பைத்தியம் என்கின்ற பட்டமும் கொடுப்பதில் பாஜக முக்கியத்துவம் கொடுப்பதாக அக்கட்சியிலிருந்து விலகிய முன்னாள் பாஜக மாவட்ட மகளிரணி தலைவரும், வழக்கறிஞருமான ஆர்.லலிதா தேவி, கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மகளிர்களை மதிப்பதில்லை என்றும், ஆகவே பல்வேறு மன உளைச்சலில் இருந்து அக்கட்சியினை விட்டு விலகியதாகவும், முதலில் கட்சியில் இணைந்த போது இருந்த ஆர்வம் அவருக்கு பின்னர் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

கட்சியின் தொண்டர் முதல் நிர்வாகி என்று யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை என்றும், பெண் நிர்வாகிகளை மகளிரணியினர் போன் செய்தாலும் எடுப்பதில்லை என்றும், அவருக்கு ஆதரவாக இருந்தால் எனக்கு மலடி மற்றும் பைத்தியம் என்றெல்லாம் கூறி ஐடி விங்க் நிர்வாகிகளே தாருமாறாக விமர்சனம் செய்வதால் அக்கட்சியினை விட்டு விலகியதாகவும், மேலும், கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதனால் அக்கட்சி மிகவும் தேய்ந்து வருவதாகவும், பாவம் பாஜக கட்சி என்றெல்லாம் விமர்சித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, அவரது நண்பரும், வழக்கறிஞருமான அதிமுகவைச் சார்ந்த கரிகாலன் என்பவர் கூறும் போது :- கரூர் மாவட்டத்தினை சார்ந்த எங்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அளவில் சாதாரண தொண்டருக்கு ஏதேனும் பிரச்சினை என்றாலும், உடனடியாக அவரே சென்று களமிறங்குவார். ஆனால், கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் அப்படி இல்லை. ஏற்கனவே இரண்டு முறை அதிமுக வில் எம்.எல்.ஏ வேட்பாளராக அரவக்குறிச்சி தொகுதிக்கு களமிறக்கப்பட்டவர். கடந்த சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களால் செந்தில்நாதனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்கப்பட்டது.

எல்லை மீறி பாஜக ஐடி விங் நிர்வாகிகள் பெண்களை கொச்சைப்படுத்துகின்றனர். பெண்கள் நம் நாட்டின் கண்களாகவும், நமது தாயாகவும் பார்க்க வேண்டும். எங்கள் அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அறிவுரையை ஏற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய வழியில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். எங்களிடமும் ஐடி விங் இருக்கு ? ஆனால் நல்ல விஷயங்களுக்காக மட்டுமே அதை பயன்படுத்த வேண்டுமே தவிர, பெண்களை கொச்சைப்படுத்த கூடாது, என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

  • interim ban for the verdict that says ar rahman should give 2 crores in copyright issue ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?