ரயில் விபத்துக்கு காரணம் யார்? மவுனமா இருந்தா எப்படி? திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தாக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2023, 8:42 pm
A Raja- Updatenews360
Quick Share

ஒடிசாவில் நேற்றைய தினம் மிக மோசமான ரயில் விபத்து அரங்கேறியது. கோரமண்டல் ரயில் உட்பட 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது. இதில் இதுவரை உயிரிழப்புகள் 288ஐ எட்டியுள்ளது.

அதேபோல காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 800ஐ தொட்டுவிட்டது. இந்த விபத்தில் காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறப்படுகிறது. காயமடைந்தோர் மட்டுமே அங்கே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே காயமடைந்தோரின் உறவினர்களைக் கொண்ட சிறப்பு ரயிலும் சென்னையில் இருந்து புறப்பட்டது.

இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்தில் தமிழக அரசின் மீட்புப் பணிகள் குறித்து ஆ ராசா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார். அவர் கூறுகையில், “தமிழர்கள் யாரும் இந்த விபத்தில் காயமடையவில்லை.. தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. இந்த விபத்தை வைத்து அரசியல் செய்யத் தமிழக அரசு விரும்பவில்லை..

இந்த மோசமான விபத்திற்கு யார் காரணம் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.. தொழில்நுட்பம் வளர்ந்த பின்னரும் இதுபோன்ற விபத்துகள் நடப்பது வேதனை தருகிறது.

கவாச் தொழில்நுட்பத்தை நாடு முழுக்க மத்திய அரசு செயல்படுத்தவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டிற்கு ரயில்வே அமைச்சர் மவுனமாகவே இருந்தார்” என்று அவர் பேசினார்.

Views: - 377

0

0