போதை ஆசாமிகளுக்கு இடையே ரகளை… போலீசார் முன்னிலையில் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த கும்பல்… அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 6:07 pm

திண்டுக்கல் ; கொடைரோடு அருகே போதையில ரகளை – 3 போதை ஆசாமிகள் ஒரு போதை ஆசாமியை பிளந்து கட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொடைரோடு மெயின் ரோட்டில் தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கொடைரோடு அருகே விளாம்பட்டி சிவா (27), மாயி (23), முகேஷ் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று இரவு மது அருந்திக் கொண்டிருந்தனர். மதுபோதை தலைக்கு ஏறிய நிலையில், எங்களது செல்போனை காணவில்லை என மதுக்கடையில் இருந்து அனைவரையும் தகாத வார்த்தையில் திட்டி உள்ளனர்.

அப்போது, மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்த கொடைரோட்டை சேர்ந்த ராஜூ தட்டி கேட்டுள்ளார். இதனால். கோபமடைந்த 3 பேரும் சேர்ந்து ராஜூ கடிமையாக தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து, மது கடை பணியாளர்கள் அம்மையநாயக்கனூர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை கடையை விட்டு வெளியே போகக் கூறியும், அதை மறுத்து மீண்டும் போலீசார் முன்னிலையில் ராஜூவை கடுமையாக தாக்கி தலையில் காயத்தை ஏற்படுத்தினர். 3 பேரையும் கைது செய்த அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை அங்குள்ள ஒருவர் தான் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…