பள்ளி மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த மாணவர்கள்… பகீர் சம்பவம்… கிராமத்தில் வெடித்த கலவரம்…!!

Author: Babu Lakshmanan
31 July 2023, 8:28 pm

ராஜஸ்தானில் பள்ளி மாணவியின் தண்ணீர் பாட்டிலில் மாணவர்கள் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை சிலர் அசிங்கமான செயலை செய்தனர். அதாவது, வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சில மாணவர்கள் தண்ணீருடன் சிறுநீரை கலந்து வைத்துள்ளனர். அதோடு, ஒரு காதல் கடிதத்தையும் மாணவியின் பையில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

வகுப்பறைக்கு சென்ற மாணவி தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலை திறந்துள்ளார். அப்போது, துர்நாற்றம் வீசியதை கவனித்த அவர், பாட்டிலில் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து, பள்ளி மீண்டும் திறந்த பிறகு காவல்நிலையம் மற்றும் தாசில்தாரிடம் புகார் அளித்த பிறகும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால், கொதித்தெழுந்த மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், குற்றம் செய்த மாணவர்களின் ஊருக்குள் புகுந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தடுக்க சென்ற போலீசார் மீதும் கற்களை வீசியதால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். இந்த வன்முறை போராட்டம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?