பழனி வந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு.. வரவேற்க வந்த பாஜகவினர் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2023, 6:44 pm

தமிழக ஆளுநர் ரவி அவர்கள் சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்து நிறைவேற்றி அனுப்பிய நீர் தேர்வு ரத்து செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்களை கிடப்பில் போட்டுள்ளதாகவும், தமிழக நலம் சார்ந்து அரசியலுக்கும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதையும் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆளுநர் வருகையை கண்டித்து பழனி நகரில் நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையத்து போலீசார் அவர்களை கைது செய்ய வாகனங்களை கொண்டு வந்தனர். அவர்கள் கைதாக மறுத்ததால் அவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்றனர்

அதேபோல வரவேற்க தேசிய கொடியுடன் வந்திருந்த பாஜகவினருக்கும் அனுமதி இல்லாததால் அவர்களையும் கைது செய்து போலீசார் வேனில் ஏற்றினார்.

அப்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை டிஎஸ்பி சரவணன் கைது செய்ய இழுக்கம் என்ற போது பாஜகவினருக்கும் டிஎஸ்பி சரவணன் உள்ளிட்ட காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை 5 மணிக்கு பழனிக்கு வருகை தரும் ஆளுநர் ரவி அவர்கள் 6 மணிக்கு மலை மீது நடைபெறும் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் முருகனை தரிசனம் செய்ய உள்ளார்.

ஆளுநர் தரிசனத்திற்கான ஏற்பாடுகளை பழனி கோயில் அறங்காவலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!