உதயநிதியால் திமுகவுக்கு தர்மசங்கடம்… தேர்தல் நெருங்க நெருங்க I.N.D.I.A. கூட்டணியில் பிளவு ; கேபி முனுசாமி..!!!

Author: Babu Lakshmanan
8 September 2023, 6:01 pm

இந்தியா கூட்டணி எதிர்மறையான சிந்தாந்தங்களை கொண்டவர்கள் என்பதால் தேர்தல் வர வர பிரிய வாய்ப்புள்ளது என்றும், நூறுக்கோடி இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் K.P.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே புளியஞ்சேரி கிராமத்தில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க 14.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்த பின் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- சனாதன தர்மம் என்பது இந்து சமையத்தின் கொள்கை, கோட்பாடு ஆயிரம் ஆண்டுகளாக இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறை, ஒழுக்கம் அனைவரையும் சமமாக பாவிக்க கூடிய கோட்பாடு.
2000 ஆண்டுகளுக்கு இடையில் சிலரின் சுயலம் கருதி சாதிய வர்ணாசிரமத்தை திணித்து வசதியோட வாழ்வதற்காக எடுத்த முயற்சி. இதை தான் தந்தை பெரியார் எதிர்த்து போராடினார்.

பெரியார் கடவுள் இல்லை என்று பேசியது அவரது கொள்கை. அதற்கு பிறகு அண்ணா திமுகவை தொடங்கியபோது ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கடவுள் நம்பிக்கையாய் இருந்தும், பிற மதங்களை மதித்து மெக்கா, ஜெருசலேம் செல்ல நிதி வழங்கினர். கோவில்களில் ஒருவேளை உணவு என்பதை கொண்டு வந்தனர். அதன்படி, கொள்கை வாரிசாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் கோடிட்டு காட்டியதை தான் எதிர்க்கின்றனர். இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளார். அது சிலரின் கொள்கை என்றாலும் சுதந்திரம், உரிமை, உணர்வுகளை பாதிக்க கூடாது. டெங்கு, கொரோனா போன்று அழிக்கப்பட வேண்டியது என்பதை நிச்சயம் ஏற்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பத்திரிகையில் தான் வருகிறது. அதற்கு நாடாளுமன்றத்தில் பதிலளிப்போம். இந்தியாவிற்கு பாரதம் என்கிற பெயர் குறித்து பிரதமர் பேச வேண்டாமென கூறி உள்ளார்.

இந்தியா கூட்டணி என்பது கலவையான கூட்டணி, பல்வேறு சிந்தாந்தங்கள் எதிர்மறை சித்தாந்தங்களை கொண்டது. பொதுவுடமை கட்சிகள் கட்சிகள் உள்ளன. தனி நாடு கோரிக்கை விடுத்த கட்சி, சுயாட்சி கோறும் கட்சிகளும் இணைந்துள்ளன. 3 கட்டங்களாக நடந்த கூட்டத்தில் கருத்துக்களை பரிமாறி உள்ளனர். கருத்து பரிமாறும் சமயத்தில் உதயநிதி பேச்சுக்கு அனைத்து கட்சியினரும் நிராகரித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் கார்கே, திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி ஆகிய கட்சியின் தலைவர்களே பேச்சாளர்களாக இல்லாமல் தலைவர்களே எதிர்க்ககூடிய நிலையில், தேர்தல் வர வர இந்திய கூட்டணி பிரிய வாய்ப்புள்ளது, பலமான கூட்டணியாக இருக்காது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி தான் பலமான கூட்டணி, என்றார்.

  • raai laxmi open talk about relationship with dhoni  என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…