கனமழையால் ஸ்தம்பித்த தலைநகரம்… வெள்ளத்தில் தத்தளிக்கும் தாம்பரம் : மழைநீரில் மூழ்கிய வாகனங்கள்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2023, 10:05 pm

கனமழையால் ஸ்தம்பித்த தலைநகரம்… வெள்ளத்தில் தத்தளிக்கும் தாம்பரம் : மழைநீரில் மூழ்கிய வாகனங்கள்.. வைரல் வீடியோ!!

சென்னையில் தற்போது கனமழை பெய்துவருகிறது. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், சேலையூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

மேலும், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், எழும்பூர், கொளத்தூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக தாம்பரம்-மேடவாக்கம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதேபோல, செங்கல்பட்டிலும் மழை பெய்துவருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தண்ணீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில் தற்போது தாம்பரம் சேலையூரில் மழை நீர் தேங்கியுள்ளது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!