கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதலுக்கு காரணமான ‘முருங்கை மரம்’… கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
28 October 2023, 4:41 pm

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத்தின் மீது நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில், கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் இந்த தாக்குதலை நடத்தியதாக கல்லூரி மாணவர் அலெக்ஸ், பாரதி, அருண்குமார், பார்த்திபன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்சி அலுவலகத்தில் இருந்த முருங்கை மரத்தில் கம்பளிப் புழு தொல்லை அதிகமாக இருந்ததாகவும், அதனை வெட்டுவது தொடர்பாக கட்சியினருடன் ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!