புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… ரூ.50 ஆயிரத்தை நெருங்கியதால் வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
21 March 2024, 11:02 am

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… ரூ.50 ஆயிரத்தை நெருங்கியதால் வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்றும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்துரூ6,235க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.77 உயர்ந்து ரூ.5,107க்கும், சவரனுக்கு ரூ.616 ஒரு சவரன் ரூ.40,856க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.81.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • A famous actress living alone with a director? The secret has been revealed! இயக்குநருடன் தனிக்குடித்தனம் நடத்தும் பிரபல நடிகை? வெளியான ரகசியம்!